

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லேவுக்கும் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவர் தன் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடினார் டேவிட் வில்லே.
“உங்களுடைய நம்பிக்கையூட்டும் மெசேஜ்களுக்கு நன்றி, எனக்கும் என் மனைவிக்கும் கரோனா பாசிட்டிவ்” என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
யார்க் ஷயருக்கு ஆடி வரும் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டேவிட் வில்லே, உள்நாட்டு வைட்டாலிடி பிளாஸ்ட் டி20 லீகில் பங்கேற்க முடியாமல் கரோனா தடைபோட்டு விட்டது.
இவரோடு மட்டுமல்ல யார்க்ஷயர் வீரர்கள் 4 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.
டேவிட் வில்லே 49 ஒருநாள் போட்டிகள், 28 டி20 சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்துக்காக ஆடியுள்ளார். 2018-ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.