இசாந்த் சர்மா, சண்டிமால் ஒரு போட்டியில் விளையாடத் தடை: ஐசிசி அதிரடி

இசாந்த் சர்மா, சண்டிமால் ஒரு போட்டியில் விளையாடத் தடை: ஐசிசி அதிரடி
Updated on
1 min read

களத்தில் மோதல் போக்கைக் கடைபிடித்ததற்காக இசாந்த் சர்மா மற்றும் இலங்கை வீரர் தினேஷ் சண்டிமால் ஆகியோர் ஒரு போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

மேலும், மோசமான நடத்தைக்காக இலங்கை வீரர்கள் லாஹிரு திரிமானே, தம்மிக பிரசாத் ஆகியோருக்கு ஆட்டத் தொகையில் 50% அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இசாந்த் சர்மா விளையாட முடியாது. சண்டிமால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாது.

நடந்து முடிந்த கொழும்பு, 3-வது டெஸ்ட் போட்டியில் தம்மிக பிரசாத்-இசாந்த் சர்மா விவகாரத்தின் போது இசாந்த் சர்மா மீது மோதியதால் சண்டிமாலுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த மோதல் போக்கில் திரிமானேயும் ஈடுபட்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இசாந்த் சர்மா, 2-வது இன்னிங்சில் உபுல் தரங்காவை வீழ்த்தி விட்டு அவரை மோசமாக வழியனுப்பியதாலும், மொத்தமாக அவரது நடத்தை மோசமாக இருந்ததாலும் நீக்கத்துக்கான 2 புள்ளிகளைப் பெற்றதால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் முடிந்த பிறகு 4 வீரர்களும் தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டதால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in