

கோலி பேட் செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தாலே பரவசம்தான் என்று ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா தெரிவித்துள்ளார்.
கோலி கேப்டன்சியில் ஆர்சிபி அணிக்காக அவர் இம்முறை ஐபிஎல் தொடரில் ஆடுகிறார் என்பது தவிர வேறென்ன?
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் ஆடம் ஸாம்ப்பாவின் லெக் ஸ்பின்னுக்கு சில முறை ஆட்டமிழந்துள்ளார், கோலியினால் ஸாம்ப்பாவின் பந்துகளை சரிவரக் கணிக்க முடியவில்லை என்பது ஓரிருமுறை தெரிந்தது.
இந்நிலையில் ஆடம் ஸாம்ப்பா கூறியதாவது:
ஐபிஎல் தொடரில் எனக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது, ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹலுடன் இணைந்து வீசுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
இருவருக்குமே இது பரஸ்பர கற்றல் செயலாக இருக்கும். அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது எனக்கு பந்து வீச வாய்ப்பு வழங்க வேண்டும்.
அணியில் கோலி, டிவில்லியர்ஸ் என உலகின் சிறந்த வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் ஆடுவதையும் எதிர்நோக்குகிறேன். இதில் விராட் கோலி பேட்டிங் செய்வது, பயிற்சி செய்யும் அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
எனவே எனக்கு இந்த ஐபிஎல் தொடர் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்றார் ஆடம் ஸாம்ப்பா.