Last Updated : 06 Sep, 2015 04:45 PM

 

Published : 06 Sep 2015 04:45 PM
Last Updated : 06 Sep 2015 04:45 PM

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ஷேன் வாட்சன்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டரில் நேற்று இரவு பதிவிட்டிருந்தது.

ஷேன் வாட்சன், பாகிஸ்தானுக்கு எதிராக 2005-ல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சிட்னியில் அறிமுகமானார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 3731 ரன்களை 35 ரன்கள் என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ளார். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 176. 75 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 3 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு 45 கேட்ச்களை பிடித்துள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா தோற்ற ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு மிட்செல் மார்ஷிடம் இவர் தன் இடத்தை இழந்தார்.

இவரது பிரச்சினை எல்.பி.டபிள்யூவாக இருந்தது, அதிகம் முறை எல்.பி.ஆகியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை பொறுத்தவரையில் குறைந்த ஸ்கோரில் ஒரே முறையில் அதிகம் ஆட்டமிழந்தால் அவர்களது கரியர் முடிவுக்கு வருவது வழக்கம், அந்த வகையில் இவரது டெஸ்ட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

"டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் சவாலாகத் திகழும் அளவுக்கு என்னிடம் மனோபலம் இல்லை. உத்தி ரீதியாகவும் வலுவாக இல்லை, எனவே ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்பதை முடிவு செய்தேன்" என்றார் ஷேன் வாட்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x