

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் கிராண்ஸ்ட்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய வீரர் டோமினிக் தீயம் தகுதி பெற்றுள்ளார்.
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் ஆஸ்திரேலிய வீரர் எனும் பெருமையையும், சாதனையையும் டோமினிக் தீயம் பெற்றார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் நேற்று நடந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆடவர் பிரிவில் நேற்று நடந்த அரையிறதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டோமினிக் தீயம், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் ரஷ்யா வீரர் டேனில் மெத்மதேவை 6-2, 7-6, 7-6 என்ற நேர் செட்களில் எந்த விதமான சிரமும் இன்றி ஆஸி. வீரர் டோமினிக் தீயம் வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆடவர் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டரை எதிர்கொண்டார் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரீனோ பஸ்டா. முதல் இரு செட்களையும் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் இழந்தாலும், விடாமுயற்சியுடன் போராடி அடுத்த 3 செட்களையும் கைப்பற்றி, பாப்லோ அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தார்.
பாப்லோவை 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என்ற செட்களில் போராடி வீழ்த்தினார் அலெக்சாண்டர்.
கடந்த 1994-ம் ஆண்டு ஜெர்மன் வீரர் மைக்கேல் ஸ்டிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார். அதன்பின் ஏறக்குறைய 26 ஆண்டுகளாக எந்த ஜெர்மன் வீரரும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறாத நிலையில் இப்போது அலெக்சாண்டர் தகுதிபெற்றுள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவு சாம்பியன்
மகளிர் இரட்டையர் பிரிவுக்கான இறுதிச்சுற்று நேற்று நடந்தது. இதில் ரஷ்யாவின் வேரா வோனரவேரா, ஜெர்மனியின் லாரா சீஜ்முன்ட் ஜோடியை எதிர்த்து தரநிலையில் 3-ம் இடத்தில் உள்ள சீனாவின் உ இபான், அமெரிக்காவின் நிகோல் மெலிகர் ஜோடி மோதியது.
இதில் உ இபான், நிகோல் மெலிகர் இணையை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வேரா வோனரவேரா, ஜெர்மனியின் லாரா சீஜ்முன்ட் ஜோடி வென்றது. இவர்களுக்கு பரிசுக் கோப்பையும், 4 லட்சம் டாலர் பணமும் பரிசாக வழங்கப்பட்டன.
36 வயதாகும் வேனரவேரா இதற்கு முன் கடந்த 2006ல் நாதாலியே டெக்கேயுடன் இணைந்து விளையாடி, யுஎஸ் ஓபனில் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2010-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபனில் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தையும் பெற்றார்.அந்த இறுதிஆட்டத்தில் கிம் கிளைஸ்டரிடம் தோல்வி அடைந்தார்.
கடந்த 2012ம் ஆண்டில் ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற வோனரேவா, 2016-ம் ஆண்டில் குழந்தைப் பிறப்புக்குப்பின் விளையாடமல்இருந்து வந்து தற்போது பட்டம் வென்றுள்ளார்.