

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் துக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் தெரிவித் துள்ளார். இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி யுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைக்கவில்லை எனக் கூறிய யூனிஸ் கான், வாரியத்தின் மீது கடுமையாக சாடினார். இந்த நிலையில் அது தொடர்பாக சஹாரி யார் கான் கூறியதாவது:
யூனிஸ் கான் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். அவர் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வருத்தமும் கிடையாது. எனினும் சமீபத்தில் வாரியத்துக்கு எதிராக அவர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆராய்ந்து வருகிறது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் தொடக்க விழாவுக்கு தான் அழைக்கப்படவில்லை என யூனிஸ் கான் கூறியிருந்தால் அது தவறு. நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக யூனிஸ் கானிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக அவரை சந்தித்து பேச வுள்ளோம். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்தித்து வருகிறோம்.
மூத்த வீரர்கள் மிகுந்த பொறுப் புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. 101 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 264 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மூத்த வீரரான யூனிஸ் கான், ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்படவில்லை என்பதற்காக ஏமாற்றம் தெரிவித்திருப்பதோடு, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிக்கு அழைக்கப்படவில்லை எனவும் கூறியிருக்கிறார் என்றார்.