Published : 28 Sep 2015 09:59 AM
Last Updated : 28 Sep 2015 09:59 AM

உமேஷ்யாதவ், வருண் ஆரோன் பந்துவீச்சு இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது: சடகோபன் ரமேஷ் தகவல்

ஈரோடு உமேஷ்யாதவ், வருண் ஆரோன் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் 140 கி.மீ.வேகத்தில் வீசி சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பை அளித்து வருவது நம்பிக்கையை அளிக்கிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்தார்.

ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: இங்கிலாந்து, ஆஸ்திரே லியா என எந்த அணியினர் இந்தியாவில் விளையாட வந்தாலும் இந்திய அணி தனது முழுத்திறனை வெளிப்படுத்தும் என்பதால் போட்டிகள் கடுமையாக இருக்கும்.

இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 60 சதவீதமாக இருக்கும் என கருதுகிறேன். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அனைத்து ஒருநாள் போட்டிகளும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். அதேசமயம் டெஸ்ட் போட்டிகள் இந்தியாவுக்கு சாதகமாக அமையும். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 3 நாட்களுக்கு பிறகு ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

ஆம்லாவும், டிவில்லியர்ஸும் முக்கிய விக்கெட்டுகளாக இருப்பார்கள். இவர்களை விரைவில் ஆட்டமிழக்க செய் யாவிட்டால், இந்திய அணி சிரமப்பட வேண்டி இருக்கும். நாத்துக்கு பிறகு இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் இருந்தது. தற்போது உமேஷ்யாதவ், வருண் ஆரோன் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் 140 கி.மீ.வேகத்தில் வீசி சர்வதேச அளவில் சிறந்த பங்களிப்பை அளித்து வருவது நம்பிக்கையை அளிக்கிறது.

நான் பார்த்த வகையில் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவருக்கு பிறகு அந்த இடத்தை வேறு வேகப்பந்து வீச்சாளரால் நிரப்ப முடியவில்லை.

கிரிக்கெட் அகாடமி தொடங்கி இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இலங்கை அணிக்கு எதிராக கொழும்பில் அடித்த 143 ரன்களையே என்னுடைய சிறந்த இன்னிங்ஸாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நாத்துக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சம் இருந்தது. தற்போது உமேஷ்யாதவ், வருண் ஆரோன் ஆகியோரின் பங்களிப்பு நம்பிக்கையை அளிக்கிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x