Published : 17 Sep 2015 12:48 PM
Last Updated : 17 Sep 2015 12:48 PM

கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட மெஸ்ஸிக்கு யாரும் இணையாக முடியாது: பார்சிலோனா பயிற்சியாளர், வீரர்கள் புகழாரம்

பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு யாரும் இணையாக மாட்டார்கள் என பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக், தடுப்பாட்டக்காரர் ஜோர்டி அல்பா ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

சாம்பியன்ஸ் லீக் போட்டியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது பார்சிலோனா. கடந்த 1990-ம் ஆண்டு ஏசி மிலன் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்றது. அதன்பிறகு எந்த அணியும் வெற்றிக்கோப்பையைத் தக்கவைத்ததில்லை.

கடந்த மே மாதம் நடந்த இறுதிப்போட்டியில் ஜுவென்டஸ் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற் றிய பார்சிலோனா, கோப்பை யைத் தக்கவைக்கும் முயற்சியில் முதல் போட்டியை வென்று வெற்றி கரமாகத் தொடங்கியுள்ளது.

அடுத்த போட்டியில் ஏஎஸ் ரோமா அணியை எதிர்கொள்கிறது பார்சிலோனா. இப்போட்டி மெஸ்ஸிக்கு 100-வது சாம்பியன்ஸ் லீக் போட்டியாகும்.

இந்நிலையில் கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரர் மெஸ்ஸி, அவருக்கு யாரும் இணையில்லை. ரியல்மாட்ரிட் நட்சத்திர வீரர் ரொனால்டோவைக் கூட அவருடன் ஒப்பிட முடியாது என பார்சிலோனா பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் மற்றும் சக வீரர் ஜோர்டி அல்பா ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, பார்சிலோனா பயிற்சியாளர் என்ரிக் கூறும்போது, “மெஸ்ஸியைப் பற்றிய என் கருத்து உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். இருப்பினும் மீண்டும் சொல்கிறேன். மெஸ்ஸி வெறும் உலகின் மிகச்சிறந்த வீரர் மட்டுமல்ல. கால்பந்து விளையாட்டு இதுவரை கண்டிராத மிகச் சிறந்த வீரர்” என்றார்.

ரியல் மாட்ரின் அணியின் கிறிஸ்டியானா ரொனால்டோவுடன் மெஸ்ஸியை ஒப்பிடும்படி சக பார்சிலோனா வீரர் அல்பாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:

ஸ்பானிஷ் லா லிகா போட்டியில் எஸ்பன்யோலுக்கு எதிராக ரியல் மாட்ரிட் 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதில், ரொனால்டோ மட்டும் 5 கோல்கள் அடித்தார். அதைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் தொடரில் சக்தார் டோனெட்ஸ்க் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்தார். அவர் சிறந்த வீரர்தான். அவர் ஏராளமான கோல்களை அடித்துள்ளார். அவர் முழுமையான வீரர்தான். ஆனால், இதுவரை யாரும் செய்யாததை, செய்ய முடியாததை மெஸ்ஸி செய்கிறார். மெஸ்ஸியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. உலகின் மிகச்சிறந்த வீரர் மெஸ்ஸி.

ஷக்தார் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, அத்தொட ரில் மெஸ்ஸி, ரொனால்டோ இருவருமே தலா 77 கோல்கள் அடித்துள்ளனர்.

மெஸ்ஸி களத்திலிருக்கும் போது, அனைத்துமே பார்சிலோனா அணிக்குச் சாதகமாக மாறிவிடும். என்னைப் பொறுத்தவரை அவர் மற்ற வீரர்களை விட ஐந்து அடிகள் மேலே இருக்கிறார். அவர் களத்தில் செய்வதை வேறு யாராலும் செய்ய முடியாது. அது ஒப்பிடமுடியாதது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x