பிஎஸ்எல் தொடக்க விழாவுக்கு அழைக்காத பாக். வாரியம் மீது யூனிஸ் கான் சாடல்

பிஎஸ்எல் தொடக்க விழாவுக்கு அழைக்காத பாக். வாரியம் மீது யூனிஸ் கான் சாடல்
Updated on
1 min read

லாகூரில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) டி20 போட்டியின் தொடக்க விழாவுக்கு தன்னை அழைக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மீது மூத்த பேட்ஸ்மேனான யூனிஸ் கான் கடுமையாக சாடியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு டி20 உலகக் கோப்பையை வென்று தந்தவ ரான யூனிஸ் கான் மேலும் கூறிய தாவது: டி20 லீக் போட்டியின் தொடக்க விழாவுக்கு எனக்கு அழைப்பில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக நான் செய்த சாதனைகளையும், டி20 கிரிக்கெட் போட்டியில் நான் படைத்த சாதனைகளையும் அவர்கள் புறந்தள்ளிவிட்டனர்.

அவர்கள் இப்படி செய்திருப்ப தன் மூலம் பிஎஸ்எல் போட்டியைப் பொறுத்தவரையில் நான் எங்கே நிற்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள்.

நான் அந்தப் போட்டியில் பங்கேற்கலாமா அல்லது வேண்டாமா என்றால் அது எனக்கு ஒரு விஷயமே இல்லை. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக இவ்வளவு காலம் பங்களித்த பிறகும் என்னை பிஎஸ்எல் போட்டியின் தொடக்க விழாவுக்கு அழைக்காதது ஏமாற்றமளிக்கிறது என்றார்.

பிஎஸ்எல் தொடக்க விழா, ஜாம்பவான் வீரர்களான இம்ரான் கான், ஜாவித் மியான்தத், யூனிஸ் கான் ஆகியோர் இல்லாமல் நடைபெற்றது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளோ, யூனிஸ்கானுக்கு அழைப்பு விடுத்ததாகக் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறுகையில், “யூனிஸ் கான், மியான் தத் போன்ற வீரர்களை பாகிஸ்தான் வாரியம் சமாதானம் செய்து பிஎஸ்எல் தொடக்க விழாவுக்கு அழைக்ககாததும், அவர்களுக்கு அதற்கான விமான டிக்கெட்டை அனுப்பாததும் மிகப்பெரிய அவமானமாகும். தொடக்க விழாவுக்கு அழைப்பிதழ் மட்டுமே அனுப்பப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். இது சரியான அணுகுமுறையா” என கேள்வியெழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in