

போர்ச்சுக்கல்லின் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ மைதானத்தில் மாஸ்க் அணியாமல் இருந்தபோது கண்காணிப்பாளர் ஒருவர் அவரை மாஸ்க் அணியும்படி வற்புறுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
கடந்த 8 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கும் கரோனா காரணமாக, உலக மக்கள் தங்களை புதிய வாழ்க்கை முறைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர்.
பொது இடங்களில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய புதிய பழக வழக்கங்களுக்கு மக்கள் பழகிவிட்டனர்.
இந்த நிலையில் பிரபல போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, மைதானம் ஒன்றில் மாஸ்க் அணியாமல் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பெண் கண்காணிப்பாளர் ஒருவர் ரொனால்டாவை மாஸ்க் அணியும்படி கூறுகிறார்.
உடனடியாக ரொனால்டோ அருகில் வைத்திருந்த மாஸ்க்கை அணிகிறார்.
இந்த நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. உலகின் தலைசிறந்த வீரர் என்றால் கரோனாவுக்கு கட்டுபட்டே ஆக வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டனர்.