

காயமடைந்த மற்றும் உடல்நலம் குன்றிய பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டும் காட்சி டி20 போட்டியில் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி விளையாடுகிறார்.
வியாழக்கிழமை, லண்டன் கியா ஓவல் மைதானத்தில் 'கிரிக்கெட் ஃபார் ஹீரோஸ்' என்ற நிதிதிரட்டு காட்சி போட்டியில் தோனி, சேவாக், ஷாகித் அப்ரீடி, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோர் ஒரு அணியில் விளையாடுகின்றனர். ஹெல்ப் ஃபார் ஹீரோஸ் அணியின் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்.
இந்த அணிக்கும் உலக லெவன் அணிக்கும் டி20 காட்சிப் போட்டி நடைபெறுகிறது. இந்த அணியில் பிரெண்டன் மெக்கல்லம், ஹெய்டன், ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித், முன்னாள் நியூஸிலாந்து வீரர்கள் ஸ்காட் ஸ்டைரிஸ், டேனியல் வெட்டோரி ஆகியோர் விளையாடுகின்றனர்.
இந்த அணிக்கு பயிற்சி அளிப்பவர் கேரி கர்ஸ்டன், அணியின் மேலாளர் சுனில் கவாஸ்கர்.
போட்டிக்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் கேமரூன் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சியில் தோனி மற்றும் பிற வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.