ஐபிஎல் 2020: ஆர்சிபி அணியில் முக்கியமான மாற்றம்

ஐபிஎல் 2020: ஆர்சிபி அணியில் முக்கியமான மாற்றம்
Updated on
1 min read

ஐபிஎல் 2020-லிருந்து விலகிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனுக்குப் பதிலாக ஆர்சிபி அணியில் ஆஸ்திரேலியாவின் லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டுள்ளார்.

தனக்கு குழந்தைப் பிறக்கப் போவதால் மனைவியுடன் இருப்பதற்காக கேன் ரிச்சர்ட்ஸன் ஐபிஎல் கிரிக்கெட்டை உதறினார்.

இந்நிலையில் அவருக்கு மாற்று வீரரை ஆர்சிபி அறிவிக்கும் போது, “ஆடம் ஸாம்ப்பாவை வரவேற்பதில் உற்சாகமடைகிறோம். நாம் தைரியமாக ஆடுவோம் ஆடம் ஸாம்ப்பா” என்று தன் ட்விட்டரில் அவரை வரவேற்றுள்ளது.

ஏற்கெனவே வாஷிங்டன் சுந்தர், சாஹல், மொயின் அலி, பவன் நெகி, என்ற சுழற்பந்து படையில் தற்போது ஆடம் ஸாம்ப்பா ஆர்சிபி அணியில் இணைந்திருக்கிறார்.

யுஏஇ.யில் பந்துகள் ஸ்பின் ஆகும் என்பதால் ஸாம்ப்பாவை இம்முறை பலமாக எதிர்பார்க்கலாம். இவர் ஏற்கெனவே ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக ஆடியுள்ளார். தோனிக்கும் கோலிக்கும் ஸாம்ப்பா சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக வீசியுள்ளார், தோனி, கோலி இருவருமே ஸாம்ப்பாவிடம் திணறியுள்ளனர்.

கேன் ரிச்சர்ட்ஸனை ஆர்சிபி அணி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு எடுத்தது, ஆடம் ஸாம்ப்பா விற்காமல் போனார்.

ரிச்சர்ட்ஸன், ஸாம்ப்பா இருவருமே இங்கிலாந்தில் தற்போது உள்ளனர், ஆஸ்திரேலிய அணிக்காக இவர்கள் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in