Last Updated : 01 Sep, 2020 03:44 PM

 

Published : 01 Sep 2020 03:44 PM
Last Updated : 01 Sep 2020 03:44 PM

‘மன்கடிங்’ விவகாரத்தில் ‘ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டை’ இழுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங்கிற்கு ஜவகல் ஸ்ரீநாத் பதிலடி

பவுலர் பந்து வீசும்போது பந்தை அவர் கையிலிருந்து வெளியே அனுப்பும் வரை ரன்னர் கிரீசுக்குள் இருக்க வேண்டும் இதுதான் விதி, அப்படி அவர் விதிமீறினால் ரன் அவுட் செய்யலாம் என்பதும் விதி எனவே இதில் ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட், கருணையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என்று அஸ்வினுக்கு ஆதரவாக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லரை இப்படி அஸ்வின் அவுட் செய்தது ஸ்பிரிட் ஆஃப் த கிரிக்கெட், விதிகளுக்குட்பட்டது என்பதற்கான வாதப் பிரதிவாதங்கள் இன்னமும் ஓயவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடுகிறார் அஸ்வின், அவரிடம் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மன்கடின் முறை அவுட் கூடாது என்று அறிவுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ‘டி.ஆர்.எஸ். வித் அஷ்’ என்ற யூ டியூப் சேனலில் ஸ்ரீநாத் அஸ்வின் உரையாடினர். இதில் ஸ்ரீநாத் கூறியதாவது:

பவுலர் பேட்ஸ்மேன் மீது கவனம் செலுத்துகிறார், ரன்னர் முனையில் இருக்கும் மட்டையாளர் பந்து டெலிவரியாகி செல்லும் வரை வெளியே காலடி எடுத்து வைக்கக் கூடாது, இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அவரோ பேட் செய்யவில்லை, அல்லது வேறு எதையும் சிந்திக்கப் போவதுமில்லை, கிரீசுக்குள் நிற்க வேண்டியதுதானே.

எனவே பேட்ஸ்மென் கிரீசை விட்டு வெளியே நகரக் கூடாது, பவுலர் தான்வீசும் எதிர்முனை பேட்ஸ்மேன் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும், ஆனால் ரன்னர் முனையில் இருப்பவர் இதை தனக்குச் சாதகமாக்கி வெளியே வருகிறார், ரன் அவுட் செய்யப்படுகிறது என்றால் எனக்கு இதில் ஒரு பிரச்சனையும் இல்லை.

இங்கு சஹிருதய மனோபாவம், கருணை எதிர்பார்க்கக் கூடாது, ஸ்பிரிட் ஆஃப் த கேம் என்பதை கொண்டு வராதீர்கள். ரன்னருக்குத்தான் ஸ்பிரிட் ஆஃப் த கேம் வேண்டும். பேட்ஸ்மேன் கிரீசுக்குள் இருக்க வேண்டும்.

பேட்ஸ்மென் தெரியாமல் கவனக்குறைவினால் கிரீசுக்கு வெளியே வந்து விடுகிறார், அது ஒரு போட்டியின் கடைசி பந்து என்று வைத்துக் கொள்வோம், ரன் அவுட் வாய்ப்பு உருவாகிறது, ஆனால் பேட்ஸ்மென் ஒரு இன்ச் உள்ளே வந்து விடுகிறார் என வைத்துக் கொள்வோம் அப்போது ரன்னர் பந்து வீசுவதற்கு முன்னமேயே 3 அடி முன்னால் கிரீசைத் தாண்டி சென்றிருக்கிறார் என்றால் அந்த ஆட்டத்தின் முடிவு எப்படி நியாயமாக இருக்க முடியும்?

ஏதோ ஒரு அணி அதற்கான விலையைக் கொடுத்தாக வெண்டும், இதில் சமனிலையை நான் பார்க்க விரும்புகிறேன்.

பேட்ஸ்மென்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பந்து போடும் போதும் ரன்னர் ஒரு 4-5 அடி முன்னால் சென்று அதன் சாதகப் பலன்களை அனுபவிக்க முடியாது. டி20-யில் ஒவ்வொரு பந்துமே முக்கியம், ஏனெனில் எத்தனை போட்டிகள் கடைசி பந்து வரை செல்கின்றன” என்றார் ஸ்ரீநாத்.

டெல்லி கேப்பிடல்ஸ் சக-உரிமையாளர் பார்த் ஜிண்டாலும் அஸ்வினின் மன்கட் அவுட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x