

வரும் 2022-ம் ஆண்டு காமன் வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அளிக்கப்பட்டுள் ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில், காமன்வெல்த் போட்டிகள் சம்மேளனத்தின் (சிஜிஎஃப்) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சம்மேளன தலைவர் லூயிஸ் மார்ட்டின் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பேசும்போது, “ நம் அனைவருக்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முடிவை இந்த கமிட்டி முழுமையாக அங்கீகரிக்கிறது” என்றார்.
இதன்மூலம் காமன் வெல்த் போட்டிகளை நடத்தும் முதல் ஆப்பிரிக்க நகரம் என்ற பெருமையை டர்பன் பெறுகிறது.
போட்டியை நடத்துவதற்கான நகரங்கள் பட்டியலில் டர்பனுக்கு கனடாவின் எட்மாண்டன் கடும் சவால் அளித்தது. செலவினங் களைக் கருத்தில் கொண்டு எட்மாண்டன் போட்டியிலிருந்து விலகியது. டர்பன் தென்னாப் பிரிக்காவின் 3-வது பெரிய நகரமாகும்.