

ரயில்வே வீராங்கனை மன்பிரீத் கவுர் குண்டு எறிதல் தேசியப் போட்டியில் தேசியச் சாதனை படைத்து 2016 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார்.
கொல்கத்தாவில் 55-வது ஓபன் தேசிய தடகளப் போட்டிகள் தொடங்கின. இதில் குண்டு எறிதல் பிரிவில் ரயில்வே வீராங்கனை 17.96 மீட்டர்கள் விட்டெறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததோடு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்.
இந்த வெற்றி மூலம் ஹேட்ரிக் தேசிய சாம்பியன் பட்டம் வென்றார் மன்ப்ரீத்.
2013-ல் ராஞ்சி தேசிய தடகளத்தில் 15.03 மீட்டர்களும், டெல்லியில் 2014-ல் 16.39 மீட்டர்களும், குண்டு விட்டெறிதலில் சிறப்பாகத் திகழ்ந்தார், தற்போது மேலும் முன்னேற்றமடைந்து இறுதிச் சுற்றில் 17.96 மீட்டர்கள் விட்டெறிந்து ஹர்பன்ஸ் கவுர் வைத்திருந்த 18 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.