Last Updated : 29 Aug, 2020 03:28 PM

 

Published : 29 Aug 2020 03:28 PM
Last Updated : 29 Aug 2020 03:28 PM

ஐபிஎல்-இன் அதிகாரபூர்வ கூட்டாளியானது ‘அன்அகாடமி’: பிசிசிஐ அறிவிப்பு

பெங்களூருவில் செயல்படும் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ‘அன்அகாடமி’ ஐபிஎல் 2020-யின் அதிகாரபூர்வ கூட்டாளி என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

13வது ஐபிஎல் டி20 தொடர் யுஏஇ.யில் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இதுவரை கரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்களில் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 சிஎஸ்கே வீரர்கள் உட்பட மொத்தம் 13 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களை ஐபிஎல் மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் ஐபிஎல் 2020-யின் அதிகாரப் பூர்வ கூட்டாளியாக 2020 முதல் 2022 வரை அன்அகாடமி என்ற நிறுவனம் செயல்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

ஐபிஎல் கிரிக்கெட் தான் இந்தியாவில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் தொடராகும். இந்திய நிறுவனமான எஜுடெக் நிறுவனமான அன்அகாடமி பார்வையாளர்களின் விருப்பங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தங்கள் தொழில்வாழ்க்கையில் உத்வேகம் வேண்டும் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் விருப்பங்களில் அன்அகாடமி தாக்கம் செலுத்தும், என்று கூறப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் துணைத்தலைவர் கரண் ஷ்ராஃ, “ஐபிஎல் அதிகாரப்பூர்வ கூட்டாளியானதில் மகிழ்ச்சி. அன்அகாடமி ஒரு உயர் தீவிர பிராண்ட் அகும், கற்றல் மற்றும் கல்விச் சந்தையில் பல புதுமைப் புகுத்தல் மூலம் புவியியல் தடைகளைக் கடந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்பான்சர்ஷிப் மூலம் அன்அகாடமி இந்தியாவில் நுகர்வோர் இணையதளவெளியில் பெரிய பிராண்டாக உருவெடுக்கும். பிசிசிஐக்கு நன்றி, நீண்ட கால உறவுகளை எதிர்நோக்குகிறோம்.” என்றார்.

முன்னதாக , முன்னதாக விவோ சீன மொபைல் போன் நிறுவனம் விலகியதையடுத்து ஃபாண்டஸி கேமிங் நிறுவனமான ட்ரீம்11 நிறுவனத்துக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை பிசிசிஐ வழங்கியது. ட்ரீம் லெவன் நிறுவனம் 4 மாதங்கள் 13 நாட்களுக்கு இந்த ஒப்பந்தத்தை ரூ.222 கோடிக்குப் பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x