பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர்...பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்ட்ர்சன்: கிளென் மெக்ரா புகழாரம்

பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர்...பவுலிங்கில் ஜேம்ஸ் ஆண்ட்ர்சன்: கிளென் மெக்ரா புகழாரம்
Updated on
1 min read

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளார், இதற்காக அவருக்கு பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் முன்னாள் ஆஸி. கிரேட் க்ளென் மெக்ரா, பிபிசிக்குக் கூறும்போது, “சச்சின் எப்படி பேட்டிங்கில் ஒரு உச்சத்தை தொட்டாரோ அதே போல் பவுலிங்கில் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் உச்சத்தை யாரும் தொட முடியாது. அவர் அடித்த ரன்களிலும் சரி (15,291), ஆடிய டெஸ்ட் எண்ணிக்கையிலும் சரி (200).

ஜிம்மி ஆண்டர்சனிடம் இருக்கும் திறமை என்னிடத்தில் இல்லை. இரு விதமாகவும் அவர் ஸ்விங் செய்வதைப் பார்க்கும்போது இவரை விடவும் சிறந்த பவுலர் இல்லை என்றே கூற முடிகிறது.” என்றார் கிளென் மெக்ரா.

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், “இவரைப் போன்ற கிரேட் பவுலர் இல்லை என்றே தோன்றுகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு 600 விக்கெட்டுகளுக்காக இவர் பேசப்படுவார் என்று நான் என் கனவில் கூட நினைத்ததில்லை. ” என்றார்.

சக வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறும்போது, “எனக்கு முழுதும் உத்வேகமே ஆண்டர்சன் தான். எப்போதும் இன்னும் சிறப்பு என்பதை நோக்கி செல்லக் கூடியவர், 600 அவரது பயணத்தை நிறுத்தாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in