நான் எதிர்கொண்டதில் சிறந்த பவுலர்: கங்குலி முதல் விராட் கோலி வரை ஆண்டர்சனுக்கு வாழ்த்து

நான் எதிர்கொண்டதில் சிறந்த பவுலர்: கங்குலி முதல் விராட் கோலி வரை ஆண்டர்சனுக்கு வாழ்த்து
Updated on
1 min read

600 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மிகப்பெரிய சாதனையை இங்கிலாந்தின் சுல்தான் ஆஃப் ஸ்விங் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிகழ்த்தியுள்ளார்.

அவருக்கு பலதரப்புகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்திய முன்னாள் வீரர்கள் தாதா கங்குலி, அனில் கும்ப்ளே, தற்போது ஆடிவரும் விராட் கோலி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஒரு வேகப்பந்து வீச்சாளர் 156 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது என்பது அரிதான ஒரு விஷயமே.

அனிக் கும்ப்ளே: ‘வெல்கம் டு த கிளப்’. 600 விக்கெட்டுகள்.. வாழ்த்துக்கள் ஜிம்மி. கிரேட் பாஸ்ட் பவுலரிடமிருந்து மிகப்பெரிய ஒரு சாதனை.

சவுரவ் கங்குலி: வெல்டன் ஜேம்ஸ் ஆண்டர்சன்.. இந்த மைல் கல் மிகப்பெரியது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் 156 போட்டிகளில் ஆடுவது நினைத்துப் பார்க்க முடியாது. ஒவ்வொரு இளம் வேகப்பந்து வீச்சாளருக்கும் உங்கள் சாதனை, மகத்துவத்தை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கும்.

இந்திய கேப்டன் விராட் கோலி: வாழ்த்துக்கள் ஜிம்மி, 600 விக்கெட்டுகள் தனித்துவச் சாதனை. நான் எதிர்கொண்ட பவுலர்களில் சிறந்த பவுலர்.

இவ்வாறு இவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in