

வீரர்கள் தங்களின் திறமையை நிரூபிக்க அதிக வாய்ப்புகள் அவ சியம் என இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி தெரிவித்துள் ளார்.
பெரிய அளவிலான போட்டி களில் வீரர்கள் தங்களின் திற மையை வெளிக்காட்ட அதிக வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியதை வரவேற் றுள்ள பின்னி, மேலும் கூறியதாவது:
விராட் கோலி கூறியதைப் போலவே எனக்கும் அதிக வாய்ப்பு கள் கிடைத்திருந்தால் நான் சிறப் பாக விளையாடி திறமையை நிரூ பித்திருப்பேன். அது முற்றிலும் உண்மை என்றார்.
நீங்கள் உங்கள் ஆட்டத்தில் நிறைய மாறுதல்களை செய்திருக் கிறீர்களா என கேட்டபோது, “நான் நிறைய மாற்றங்களை செய்ய வில்லை. அதேநேரத்தில் மனரீதி யான நெருக்கடிகளை சமாளிப் பதற்காக சில மாற்றங்களை செய்திருக்கிறேன்” என்றார்.
தென் ஆப்பிரிக்க தொடர் குறித் துப் பேசிய பின்னி, “தரமான ஓர் அணிக்கு எதிராக விளையாட விருக்கிறோம். அனைத்துவித மான போட்டிகளிலும் தென் ஆப் பிரிக்கா வலுவான அணியாகும். எனவே இந்தியா-தென் ஆப்பி ரிக்கா கிரிக்கெட் தொடர் நல்ல தொடராக அமையும். அந்தத் தொடரை சிறப்பான முறையில் நாம் தொடங்குவது அவசியம். அது மிகுந்த சவால் மிக்க தொடர்.
அந்தத் தொடரில் புதிய பந்தின் மூலம் பந்து வீசுவதையே விரும்புகிறேன். ஏனெனில் புதிய பந்தில்தான் பந்தை ஸ்விங் செய்ய முடியும். அதேநேரத்தில் பாதியளவு பழைய பந்து மற்றும் பழைய பந்திலும் மகிழ்ச்சியாக பந்துவீசுவேன். அதிலும் சில வித்தி யாசமான பந்துவீச்சை கையாள லாம்” என்றார்.