தோனி - ரோஹித் சர்மா ரசிகர்களிடையே கைகலப்பு; ‘இந்தப் பைத்தியக்காரத்தனம் வேண்டாம்’ என சேவாக் வேதனை

தோனி - ரோஹித் சர்மா ரசிகர்களிடையே கைகலப்பு; ‘இந்தப் பைத்தியக்காரத்தனம் வேண்டாம்’ என சேவாக் வேதனை
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூர் மாவட்டம் குருந்த்வாதில் சனிக்கிழமையன்று தோனி, ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு இடையே கைலப்பு, மோதல் ஏற்பட்டதால் பரபரப்பானது.

ரோஹித் சர்மாவுக்கு கேல்ரத்னா விருது என்பதைக் கொண்டாடி அவரது ரசிகர்கள் பேனர்கள், போஸ்டர்க்ள் வைத்தனர். ஓய்வு பெற்ற தோனிக்கும் இதே ஊரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன, பேனர்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் ரோஹித் சர்மா போஸ்டர்கள், பேனர்களை கும்பல் ஒன்று கிழிக்க இதனை தோனி ரசிகர்கள்தான் கிழித்துள்ளனர் என்று ஒரு அசிங்கமான மோதல் ஏற்பட்டது. ஏபீபி லைவ் செய்திகளின் படி ரோஹித் சர்மா ரசிகர் ஒருவர் தோனி ரசிகர்கள் மீது வசைமாரி பொழிய ரோஹித் சர்மாவின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன என்று தெரிகிறது.

தோனி ரசிகர்களை திட்டிய அந்த ரோஹித் ரசிகரை கரும்புத் தோட்டத்தில் வைத்து அடித்து உதைத்துள்ளனர். சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள் இப்படி நடந்து கொள்வதைப் பார்த்து வருகிறோம்.

ஆனால் ஜெண்டில்மேன் ஆட்டமான கிரிக்கெட்டில் ரசிகர்கள் நாயக வழிபாட்டு மோகத்தில் இப்படி செய்வது ட்விட்டர்வாசிகளையும் வேதனைப்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி பரவ இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக், கிரிக்கெட் ரசிகத்தன்மையை வெறித்தனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டாமென்று வேதனையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் தன் ட்விட்டரில், “வீரர்கள் ஒருவரையொருவர் நேசிப்பவர்கள். அவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். அவர்கள் தேவைப்பட்டால்தான் பேசிக்கொள்வார்கள், குறைவாகப் பேசுபவர்கள். ஆனால் ரசிகர்களாகிய நீங்கள் பைத்தியக்காரத்தனமாகச் செயல்படுகிறீர்கள். ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளாதீர்கள், டீம் இந்தியாவை ஒன்று எனப் பாருங்கள்” என்று வேதனையுடன் அறிவுரை வழங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in