தோனி விஷயத்தில் பிசிசிஐ தோல்வி அடைந்து விட்டது: பாக். முன்னாள் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் காட்டம்

தோனி விஷயத்தில் பிசிசிஐ தோல்வி அடைந்து விட்டது: பாக். முன்னாள் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் காட்டம்
Updated on
1 min read

தோனி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை சுதந்திர தினத்தன்று அறிவித்தார். முறையாக பிரியாவிடை அளிக்காமல் தோனியை இப்படி ஓய்வு பெற விட்டிருக்கக் கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சக்லைன் முஷ்டாக் யூடியூப் சேனலில் கூறியதாவது:

நான் எப்பவுமே தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செய்திகளைத்தான் கூறுவேனே தவிர எதிர்மறை எண்ணப்போக்கை வெளிப்படுத்த மாட்டேன்.

ஆனால் தோனி ஓய்வு விஷயத்தில் நான் இதைக் கூறியாக வேண்டியுள்ளது. இது பிசிசிஐக்கு ஒரு தோல்வி. தோனி போன்ற ஒரு பெரிய வீரரை சரியான விதத்தில் பிசிசிஐ நடத்தவில்லை.

அவரது ஓய்வு இப்படி நடந்திருக்கக் கூடாது. இது என் இதயத்திலிருந்து எழும் உணர்வு, தோனியின் லட்சக்கணக்கான ரசிகர்களும் இதைத்தான் உணர்ந்திருப்பார்கள்.

பிசிசிஐ குறித்து இப்படிக் கூற என்னை மன்னிக்கவும், பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அவர் ஆடுவது மகிழ்ச்சி. ஆனால் சர்வதேச ஓய்வு இன்னும் வித்தியாசமாக அமைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவுகள் உண்டு. ஒவ்வொரு வீரருமே ஆட்டத்தில் தான் உயர்ந்திருக்கும் போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புவார்கள். தோனிக்கும் இந்த கனவு இருந்திருக்கலாம்.

இவ்வாறு கூறினார் சக்லைன் முஷ்டாக்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in