ஷாங்காய் சேலஞ்சர்ஸ்: அரையிறுதியில் நுழைந்தார் யூகி பாம்ப்ரி

ஷாங்காய் சேலஞ்சர்ஸ்: அரையிறுதியில் நுழைந்தார் யூகி பாம்ப்ரி
Updated on
1 min read

ஷாங்காய் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள யூகி பாம்ப்ரி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்ஸனை தோற்கடித்தார்.

இந்தத் தொடரில் இதுவரை ஒரு செட்டைக்கூட இழக்காத பாம்ப்ரி, தாம்ப்ஸனுக்கு எதிராக ஒரு பிரேக் பாயிண்ட்டைகூட இழக்கும் சூழலை சந்திக்கவில்லை. அதேநேரத்தில் ஒவ்வொரு செட்டிலும் தாம்ப்ஸனின் சர்வீஸை இரு முறை முறியடித்தார்.

வெற்றி குறித்துப் பேசிய யூகி பாம்ப்ரி, “காலிறுதியில் உறுதியான ஆட்டத்தை ஆடினேன். தொடர்ச்சியாக சிறப்பாக சர்வீஸ் அடித்தேன். அது நான் வெற்றி பெற உதவியது” என்றார். யூகி தனது அரையிறுதியில் ரஷ்யாவைச் சேர்ந்த தகுதி நிலை வீரரான டேனில் மெத்வதேவை சந்திக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in