

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே இந்திய - சீன எல்லை பிரச்சினை காரணமாக சீனாவின் விவோ நிறுவனம் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சரில் இருந்து விலகியது.புதிய டைட்டில் ஸ்பான்சருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது.
ஏலத்தில் டாடா குழுமத்தை பின்னுக்குத் தள்ளி ட்ரீம் 11 நிறுவனம் ரூ.222 கோடிக்கு ஸ்பான்சர்ஷிப்பை கைப்பற்றியது.விவோ நிறுவனம் பிசிசிஐ-க்கு ஆண்டுக்கு ரூ.440 கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.