Published : 16 Aug 2020 05:15 PM
Last Updated : 16 Aug 2020 05:15 PM

நான் என் பாணியில் ஆடுகிறேன், நன்றி; சற்றே இறுக்கத்துடன் கூறிய தோனி: கோச் மைக் ஹஸ்ஸி பகிர்வு

தோனி ஓய்வு பெற்று விட்டார், ஒரு சகாப்தம் முடிந்தது என்று அனைவரும் தோனிக்கு அன்புடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். மைக் ஹஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி கேப்டன்சியில் ஆடியவர் பிறகு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.

ஐபிஎல் போட்டித் தொடரில் ஒருமுறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தகுதிச் சுற்று போட்டியில் ரஷீத் கான் பவுலிங் முறை பற்றி ஒரு சிறு ஆலோசனை வழங்கத் திட்டமிட்ட போது தோனி அதை முதலில் ஏற்றுக் கொள்ளாமல் பிறகு ஏற்றுக் கொண்டதாக மைக் ஹஸ்ஸி பதிவு செய்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது:

“சிஎஸ்கே அணியில் என்னுடைய முதலாம் ஆண்டு பயிற்சிக் காலம் அது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடந்த தகுதிச் சுற்றுப்போட்டி. எங்கள் அணியின் அனலிஸ்ட் ரஷீத் கான் பந்து வீச்சு குறித்த ஒரு அருமையான கண்டுப்பிடிப்பை அவர் வைத்திருந்தார். அவர் ஒரு கிரேட் பவுலர்.

அவர் கையை இப்படி வைத்திருந்தால் லெக் ஸ்பின், வேறு மாதிரி கையை வைத்திருந்தால் கூக்ளி என்பதாகவும் காட்டினார். இந்தத் தகவலை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. பெரிய ஆட்டத்திற்கு முன்னதாக இந்தத் தகவலை வீரர்களிடம் சொல்ல வேண்டும். ஆனால் அப்படியே விட்டு விடலாமா என்றும் யோசித்தேன். கடைசியில் இந்த தகவலை அனுப்பினேன், அதனுடன் இதை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தகவல் அனுப்பினேன்.

இதற்கான பதில் மெசேஜ் தோனியிடமிருந்து வரவில்லை. அவர் பேட்டிங் ஆட களமிறங்கினார் ரஷீத் கானை ஆடினார். நாங்கள் நெருக்கடியில் இருந்தோம், விக்கெட்டுகள் போய்க்கொண்டிருந்தன. ரன் விகிதமும் எங்கள் கையை மீறி சென்று கொண்டிருந்தது. அப்போது தோனி ரஷீத் கானை எதிர்கொண்ட பந்தில் கவர் ஆட முயன்றார், பந்து கூக்ளி ஆகி நேராக ஸ்டம்பைத்தாக்கியது. தோனி நேராக என்னிடம் வந்தார், ‘என் வழியிலேயே நான் பேட் செய்கிறேன்’ என்றார்.

அவர் இப்படிச் சொன்னது எனக்கு கவலையளித்தது. ஆனால் அதன் பிறகு தோனி கூறினார், ‘உங்கள் தகவல் சரிதான், ஆனால் அதனை நான் பிராக்டிஸ் செய்ய நேரமில்லை. எனவே நேரம் இருக்கும் போது மீண்டும் அந்த தகவலை எனக்கு அளியுங்கள். வலையில் பயிற்சி மேற்கொண்ட பிறகு அவர் கையைப் பார்த்து ஆடினால் சரியாக இருக்கும்’ என்றார். ” இவ்வாறு கூறினார் மைக் ஹஸ்ஸி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x