Published : 16 Aug 2020 11:46 AM
Last Updated : 16 Aug 2020 11:46 AM

கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி கூறிய சுவாரசியமான கருத்துக்கள்: ஒரு தொகுப்பு

எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டை பற்றி, வெற்றியைப் பற்றி, தோல்வியைப் பற்றி கூறிய கருத்துக்கள் சுவாரஸ்யமானவை, நகைச்சுவையானவை சிலவேளைகளில் அவருடைய கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்து விடும், சிலது அறியாமல் சில ரகசியங்களை வெளியிட்டதாகி விடும்.

ஒரு முறை சாம்பியன்ஸ் ட்ராபியில் சேவாக் அணியில் இருக்கிறாரா, இல்லையா என்பதை செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கவில்லை, உடனே ஊடகங்கள் சேவாகுக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபட்டு என்றெல்லாம் தங்கள் இஷ்டத்துக்கு எழுதின, இதனையடுத்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பையே எதிர்த்துப் புறக்கணித்தார், அப்போது அவர் கூறியபோது ஒரு கேப்டனாக அவரது புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதாக அமைந்தது, ‘சேவாக் அணியில் இருக்கிறாரா இல்லையா என்பது எதிரணியினரின் உத்தியைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பது, எனவே அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை எப்படி முன் கூட்டியே தெரிவிக்க முடியும்’ என்றார். இது போன்று எம்.எஸ்.தோனியின் கருத்துக்கள் மிகவும் பிரபலமானவை, புத்திசாலித்தனமானவை.

அவற்றில் சிலவற்றைத் தொகுத்து அளிக்கிறோம்:

1.ஒவ்வொரு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கும் சிஎஸ்கே தகுதி பெற்று விடுகிறதே எப்படி?

தோனி: அது என்ன என்று நான் ஒவ்வொருவரிடமும் தெரிவித்தால் சிஎஸ்கே என்னை ஏலம் எடுக்காது.

2.அனைத்து வடிவங்களிலும் கேப்டன்சி செய்வதால் தாடி நரைத்து விட்டதா?

தோனி: உங்கள் மேல் 100கிலோவை வைப்பது போன்றதாகும் இது. அதுவே நம் எடையைக் குறைத்து விடும். இதன் பிறகு மலையை தூக்கி வைத்தாலும் கவலையில்லை. ஏனெனில் வித்தியாசம் தெரியாது.

3.மிகவும் மோசமாக ஆடிய போது, “நான் இதனை மோசமான ஆட்டம் என்று கூற மாட்டேன். ஏனெனில் இது மோசம் என்பதால் அல்ல, ஆட்டமே அல்ல என்பதால்”.

4. இங்கி, ஆஸியில் அடுத்தடுத்து ஒயிட்வாஷ் வாங்கிய போது, எது மோசம் என்ற கேள்விக்கு, “நாம் செத்துப் போகிறோம் என்றால் செத்துப் போகிறோம் அவ்வளவுதான் எது சிறந்த முறையில் சாவது என்ற கேள்வியே தேவையில்லை.

5. ரன் ஓடுவது பற்றி, “1.8 அல்லது 1.9 ரன்னை நாம் 2 ரன்னாக மாற்றலாம் 1.75, 1.7 ரன்னை அல்ல”

6. மூன்று முக்கிய ஐசிசி ட்ராபிகளை வென்ற பிறகு இன்னும் என்னசாதிக்க இருக்கிறது என்று கேட்ட போது, “இந்த வெற்றிகளை மீண்டும் நிகழ்த்துவதில் எனக்கு பிரச்சினையில்லை” என்றார்.

7. விமர்சனங்கள் குறித்து, “என் வீட்டில் 3 நாய்கள் இருக்கின்றன. வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அவை என்னை ஒரே மாதிரியாகத்தான் நடத்தும்”

8. தோற்றது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் என்ன தவறு நடந்தது என்று கேட்ட போது, “அதனால்தான் சொல்கிறேன் ஆட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று, பார்த்திருந்தால் என்ன தவறு என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்”

9.2014-15, உ.கோப்பையுடன் சேர்த்து மிக நீண்ட ஆஸி. தொடர் குறித்து நகைச்சுவையாக, ”இன்னும் 20 நாட்கள் இருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்”

10. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை அணியில் எடுத்தால், “இரண்டு விஷயங்கள் நடக்கும் ஒன்று கேப்டன் தடைசெய்யப்படுவார், இல்லையெனில் நாம் தோற்போம்”

11. ஸ்ரீசாந்த் பற்றி, “ஸ்ரீசாந்த்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரே நபர் ஸ்ரீசாந்த் தான், என் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான விஷயம் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை”

12. “100 சதவீதம் ஃபிட் இல்லை. சிறந்த முறையில் ஆட முடியவில்லை, ஆனாலும் ஆடுவேன் என்றால் அது ஏமாற்று வேலை”

13. “பத்திரிகையாளர்கள் என் ஸ்நேகிதகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றி விடுகிறீர்கள் யாரவது ஒருவரை கொஞ்ச நாட்களுக்கு தொடருங்களேன்”

14. 1929 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாகக் கருதுங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x