

இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 போட்டிகள் என்று நீண்ட தொடரை விளையாடவிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லெக்ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், ஆஃப் ஸ்பின்னர் டேன் பைட் ஆகியோருடன் சைமன் ஹார்மர் என்ற லெக்ஸ்பின்னரும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
விக்கெட் கீப்பராக டேன் விலாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார், எனவே குவிண்டன் டி காக்கிற்கு இடமில்லை.
செப்டம்பர் 29-ம் தேதி தென் ஆப்பிரிக்கா அணி டெல்லியில் பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது. இதனையடுத்து அக்டோபர் 2, 5, மற்றும் 8 ஆகிய தேதிகளில் 3 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெறுகிறது. அக்டோபர் 11, 14, 18, 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. அதன் பிறகு சண்டிகர், பெங்களூரு, நாக்பூர், டெல்லி ஆகிய இடங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: ஹஷிம் ஆம்லா (கேப்டன்), ஏ.பி.டிவில்லியர்ஸ், தெம்பா பெவுமா, ஜே.பி.டுமினி, ஃபாப் டு பிளேஸ்ஸிஸ், டீன் எல்கர், சைமன் ஹார்மர், இம்ரான் தாஹிர், மோர்னி மோர்கெல், வெர்னன் பிலாண்டர், டேன் பைட், கேகிசோ ரபாதா, டேல் ஸ்டெய்ன், ஸ்டீயான் வான் ஜில், டேன் விலாஸ் (வி.கீ).
ஒருநாள் போட்டி அணி: டிவில்லியர்ஸ் (கேப்டன்), கைல் அபாட், ஹஷிம் ஆம்லா, ஃபர்ஹான் பிஹார்டியன், குவிண்டன் டி காக், டுமினி, டு பிளேஸ்ஸிஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மோர்னி மோர்கெல், கிறிஸ் மோரிஸ், ஏரோன் பாங்கிஸோ, காகிசோ ரபாதா, ரைலி ரூசோவ், டேல் ஸ்டெய்ன்.
டி20 அணி: டு பிளேஸ்ஸிஸ் (கேப்டன்), கைல் அபாட், ஆம்லா, பிஹார்டியன், டி காக், மெர்சண்ட் டி லாங், ஏ.பி.டிவில்லியர்ஸ், டுமினி, இம்ரான் தாஹிர், எடி லீயி, டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ரபாதா, டேவிட் வீஸ, காயா ஸோண்டோ.