

ஐபிஎல் போட்டிகளின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த சீன நிறுவனமான விவோ விலகியதையடுத்து புதிய டைட்டில் ஸ்பான்சர்களை பிசிசிஐ தேடி வருகிறது.
இந்நிலையில் ஸ்பான்சராக விரும்பி இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ளன. அதன் பெயர்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்.19-ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகர்களில் 53 நாட்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
சீனாவின் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரிலிருந்து இந்த ஆண்டு விலகியதையடுத்து புதிய ஸ்பான்சர்களை நியமிக்கும் வேலையில் பிசிசிஐ இறங்கியது.
இந்நிலையில் டாடா குழுமம், அன் அகாடமி ட்ரீம் 11 ஆகிய நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரர்களாக இருக்க விருப்பம் தெரிவித்து பிசிசிஐக்கு விண்ணப்பம் அளித்துள்ளன.
விண்ணப்பம் அனுப்புவதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிந்தது. ஆனாலும் ஒப்பந்தப் புள்ளியை அனுப்பி தொகையைக் குறிப்பிட ஆகஸ்ட் 18 வரை காலக்கெடு உள்ளது.
பிசிசிஐ-யால் தேர்வு செய்யப்படும் நிறுவனம் 4 மாதங்கள், 13 நாட்களுக்கு ஐபிஎல் 2020 விளம்பரதாரர்களாக இருக்கும். பதஞ்சலி, ஜியோ நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவியதாக செய்திகள் எழுந்தன, ஆனால் இந்நிறுவனங்கள் விண்ணப்பம் அனுப்பியதற்கான உறுதியான தகவல்கள் இல்லை.