Last Updated : 14 Aug, 2020 04:46 PM

 

Published : 14 Aug 2020 04:46 PM
Last Updated : 14 Aug 2020 04:46 PM

சுவாரசியம் குறையுமா ஐபிஎல்டி20: இங்கி,ஆஸி. அணியின் 29 வீரர்கள் சில ஆட்டங்களுக்கு இல்லை: என்ன காரணம் ?

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணியின் சார்பில் 8ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ள 29 வீரர்கள் பங்கேற்கமுடியாத சூழலில் உள்ளனர்.

செப்டம்பர் 4-ம் தேதி முதல் 16-ம் தேதி முதல் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் சவுத்தாம்டன், மான்செஸ்டரில் நடப்பதால், அந்த தொடர் முடிந்துதான் ஐபிஎல் போட்டியில் இரு நாட்டு வீரர்களும் பங்கேற்க முடியும்.

இங்கிலாந்து பயணம் செல்லும் ஆஸ்திரேலிய அணி சவுத்தாம்டனில் செப்டம்பர் 4,6,8 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளிலும், மான்செஸ்டரில் 11, 13, 16 தேதிகளில்ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது.

இந்த தொடரை முடித்துக்கொண்டு, இரு அணிகளைச் சேர்ந்த ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றவீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்டெம்பர் 17 அல்லது 18-ம் தேதிதான் வந்து சேர்வார்கள். அதன்பின் இரு நாட்டு அணியினரும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்த 6 நாட்களில் இரு நாட்டு வீரர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை முதல்நாள், 3-ம் நாள் 6-ம் நாள் எடுக்கப்படும். அதில் நெகட்டிவ் வந்தபின்பு 7-வது நாள் பயிற்சிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஆதலால், ஐபிஎல் போட்டித் தொடரின் முதல் 3 ஆட்டங்கள்வரை இருஅணிகளைச் சேர்ந்த 29 வீரர்கள் தாங்கள் இடம் பெற்ற 8 அணிகளிலும் பங்கேற்கமாட்டார்கள். குறிப்பாக டேவிட் வார்னர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் ஆகியோர்இடம் பெறமாட்டார்கள்.

இதில் மிகவும் மோசமாக பாதி்க்கப்டுவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். ஏனென்றால் முக்கிய வீரர்களான ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ஆர்ச்சர் ஆகியோர் விளையாடமாட்டார்கள்.

இரு அணிகளைச் சேர்ந்த 29 வீரர்கள்தான் அதிரடிக்கும், ஆவேசமான பந்துவீச்சுக்கும் பெயரெடுத்தவர்கள், இவர்கள் சில போட்டிகளைத் தவறவிடும் போது போட்டியில் ஸ்வாரஸ்யம் தொடக்கத்தில் குறைந்தாலும், இவர்கள் வந்தபின், போட்டியின் புள்ளிப்பட்டியலுக்கு முன்னேற கடும் போட்டி ஏற்படும், அப்போது ஸ்வாரஸ்யம் அதிகரிக்கும்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடர் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடக்கும் எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x