

சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு ஏரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை உறுதி செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியை அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் இந்தத் தொடரில் இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. இந்தத் தொடர் ஜூலையில் நடைபெற வேண்டியது, ஆனால் கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
ஒருநாள் அணியில் கிளென் மேக்ஸ்வெல், நேதன் லயன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். உஸ்மான் கவாஜா, ட்ராவிஸ் ஹெட் அணியில் இல்லை.
இங்கிலாந்து தொடர் முடிந்து ஆஸி. அணி திரும்பியவுடன் அனைவரும் 14 நாட்கள் சுயதனிமையில் இருக்க வேண்டும். ஆகஸ்ட் 23ம் தேதி பெர்த்திலிருந்து ஆஸி. அணி புறப்படுகிறது.
21 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் பிலிப், டேனியல் சாம்ஸ், ரைலி மெரிடித் ஆகிய அறிமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணி விவரம்:
ஏரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் அபாட், ஆஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, பாட் கமின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ரைலி மெரிடித், ஜோஷ் பிலிப், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்ப்பா.