பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டால் என்ன? பாகிஸ்தானுக்கு ‘ஒயிட் வாஷ்’ உறுதி: மைக்கேல் வான் ஆரூடம்

மைக்கேல் வான்.
மைக்கேல் வான்.
Updated on
1 min read

குடும்ப பிரச்சினை காரணமாக நியூஸிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடப்போவதில்லை.

இன்று 2வது டெஸ்ட் போட்டியில் அவருக்குப் பதிலாக இடது கை பவுலிங் ஆல்ரவுண்டர் சாம் கரன் அணிக்கு வந்துள்ளார். பாகிஸ்தான் அணியில் ஷதாப் கானுக்கு பதில் சொஹைல் கான் அணிக்குள் வருகிறார்.

இந்நிலையில் முன்னாள் கேப்டனும் இந்நாள் வர்ணனையாளருமான மைக்கேல் வான் கூறும்போது பென் ஸ்டோக்ஸ் இல்லையென்றால் என்ன? பாகிஸ்தானுக்கு 3-0 ஒயிட் வாஷ் உறுதி என்றார்.

ஏற்கெனவே ஓல்ட் ட்ராபர்டில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது பாகிஸ்தான், காரணம் பாக்.கேப்டன் அசார் அலியின் கேப்டன்சி கோளாறுகளே. மேலும் பட்லர், வோக்ஸ் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்று இங்கிலாந்து 3-0 என்று வெற்றி பெறும் என்று கூறிய மைக்கேல் வான்,

“பென் ஸ்டோக்ஸ் ஓய்வறையில் பெரிய செல்வாக்கு செலுத்துபவர். பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் பாகிஸ்தானை ஒப்பிடும்போது இங்கிலாந்து வலுவான அணி. எனவே இங்கிலாந்து 3-0 என்றுதொடரை வெல்லும்.

பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி ஒரு வீரராக டெஸ்ட்டில் அனுபவம் பெற்றிருந்தாலும் கேப்டனாக அனுபவம் இல்லாதவர், முதல் டெஸ்ட் போட்டியில்தான் அவருக்கு வெற்றி வாய்ப்பு நெருங்கி வந்தது.

ஜேம்ஸ் ஆண்டர்சன் அடுத்தடுத்து ஆட மாட்டார் என்று நினைக்கிறேன் எனவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமென்றே கருதுகிறேன். மார்க் உட் வர வாய்ப்புள்ளது” என்றார் மைக்கேல் வான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in