ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் காஷ்யப் தோல்வி

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் காஷ்யப் தோல்வி
Updated on
1 min read

ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண் டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் காஷ்யப் தோல்வி கண்டார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடந்த காலிறுதியில் உலகின் 8-ம் நிலை வீரரான காஷ்யப் 14-21, 18-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் சவ் டியென் சென்னிடம் தோல்வி கண்டார்.

இந்தியாவின் முன்னணி வீரர் களான காந்த், எச்.எஸ்.பிரணாய், முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் ஏற்கெனவே தோல்வி கண்ட நிலையில், இப்போது காஷ்யப் காலிறுதியில் தோல்வி கண்டதன் மூலம் ஜப்பான் ஓபனில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

உலகின் முதல் நிலை வீராங் கனையான சாய்னா, 4-ம் நிலை வீரரான காந்த் ஆகியோர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் உள்பட அனை வரும் காலிறுதியைத் தாண்டாமலேயே வெளியேறியது ஏமாற்ற மாக அமைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in