ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் பயிற்சியாளருக்கு கரோனா வைரஸ் தொற்று

ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக்.
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட் அனைத்து கரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு யுஏஇ-யில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் பீல்டிங் பயிற்சியாளார் திஷாந்த் யாக்னிக்கிற்கு பரிசோதனையில் கரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.

அடுத்த வாரம் மும்பையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் ஒன்று கூட வேண்டும், பிறகு யுஏஇ பயணம் என்று திட்டமிடப்பட்டிருந்தது, இந்நிலையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது.

பிசிசிஐ அறிவுறுத்தலின் படி இரண்டு சோதனைகள் நடத்தப்பட வேண்டும், அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸின் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், நிர்வாகிகள் ஆகியோரும் யுஏஇ செல்வதால் கூடுதல் கரோனா டெஸ்ட் எடுக்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

யாக்னிக் தற்போது தன் சொந்த ஊரான உதய்ப்பூரில் இருக்கிறார். 14 நாட்கள் கட்டாயத் தனிமை தேவைப்படுவதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in