ஹாக்கி வீரர் மன்தீப் சிங் கரோனா வைரஸால் பாதிப்பு; ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதி

ஹாக்கி வீரர் மன்தீப் சிங் கரோனா வைரஸால் பாதிப்பு; ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இந்திய ஹாக்கி வீரரான மன்தீப் சிங்கின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு திடீரென இறங்கியதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் ஆபத்து ஒன்றும் இல்லை. அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மன்தீப் சிங், கேப்டன் மன்ப்ரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார், கோல் கீப்பர் பதக் ஆகியோருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. பெங்களூருவில் தேசிய முகாமுக்கு இவர்கள் வந்த பிறகுதான் கரோனா தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் இவர்களுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் மந்தீப் சிங்கின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு திடீரென குறையத் தொடங்கியது.

இரவில் அவரது ரத்த ஆக்சிஜன் அளவு இயல்புக்கும் கீழே குறைந்தது. இதனையடுத்து அவர் மிதமான பாதிப்பு நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் தீவிர நிலையை எட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இதனையடுத்து எஸ்.எஸ். ஸ்பார்ஷ் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

25 வயதாகும் மந்தீப் சிங் இந்தியாவுக்காக 125 ஆட்டங்களில் ஆடி இதுவரை 60 கோல்களை அடித்துள்ளார். 2018 ஆசியசாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இவர் ஆடியதும் இவரது பெருமைக்குரியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in