பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்: விராட் கோலிக்கு முதலிடம்

பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்: விராட் கோலிக்கு முதலிடம்
Updated on
1 min read

எஸ்இஎம் ரஷ் எனும் நிறுவனத்தின் ஆய்வின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஆன்லைனில் சராசரியாக 16.2 லட்சம் முறை தேடப்பட்டார். அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி மாதத்துக்கு சராசரியாக 2.4 லட்சம் முறை தேடப்பட்டது. ஆய்வின் படி முதல் 10 பேரில் மற்ற கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனி, ஜார்ஜ் மேக்கே, ஜோஷ் ரிச்சர்ட்ஸ், ஹர்திக் பாண்டியா, சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் மேத்யூஸ் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் உள்ளனர்.

கிரிக்கெட் அணிகளைப் பொறுத்த வரை, ‘தி மென் இன் ப்ளூ' என்று அழைக்கப்படும் இந்திய அணி முன்னிலை வகித்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மகளிர் கிரிக்கெட்டில் முதல் 10 இடங்களைப் பெறவில்லை என்றாலும், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி ஆகியோர் 12 மற்றும் 20-வது இடத்தை பிடித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in