நியூஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: சர்தார் சிங் தலைமையில் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணி

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர்: சர்தார் சிங் தலைமையில் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணி
Updated on
1 min read

நியூஸிலாந்துக்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஹாக்கித் தொடரில் விளையாடவுள்ள 21 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்தார் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 2 முதல் 11 வரை நியூஸிலாந்தின் ஆக்லாந்து, நெல்சன், கிறைஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் நியூஸிலாந்து ஏ அணியுடன் விளையாடுகிறது இந்திய அணி.

டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் தலைமைப் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸின் மேற்பார்வையில் நடைபெற்ற பயிற்சி முகாமின் அடிப்படையில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஓல்ட்மான்ஸ் கூறியதாவது: கடந்த இரு வாரங்களாக ஒருங்கிணைந்து விளையாடுவது மற்றும் பந்தை சிறப்பாக கடத்துவது தொடர்பாக வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டனர். பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடிக்காமல் கோலாக்குவது தொடர்பாகவும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட வீரர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அந்தத் தொடரில் சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். கோல் கீப்பர்களும் சிறப்பான முறையில் தயாராகியிருக்கின்றனர். அவர்கள் போட்டியின்போது அசத்தலாக ஆட காத்திருக்கிறார்கள்” என்றார்.

அணி விவரம்:

கோல் கீப்பர்கள்: ஜேஷ் (துணை கேப்டன்), ஹர்ஜோத் சிங். பின்களம்: பைரேந்திர லகரா, கோதாஜித் சிங், வி.ஆர்.ரகுநாத், ஜாஸ்ஜித் சிங் குலார், ரூபிந்தர் பால் சிங், குருஜிந்தர் சிங். நடுகளம்: சர்தார் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங், எஸ்.கே.உத்தப்பா, சத்பிர் சிங், தேவிந்தர் வால்மீகி, மன்பிரீத் சிங், தரம்வீர் சிங். முன்களம்: எஸ்.வி.சுனில், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாய், நிகின் திம்மையா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in