மே.இ.தீவுகள் பயிற்சியாளர் சிம்மன்ஸ் சஸ்பெண்ட்

மே.இ.தீவுகள் பயிற்சியாளர் சிம்மன்ஸ் சஸ்பெண்ட்
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸை சஸ்பெண்ட் செய்துள் ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வரும் நவம்பரில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இலங் கைக்கு எதிரான கிரிக்கெட் தொட ரில் விளையாடவுள்ளது. அதற்கான ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப் பட்டது. அதில் ஆல்ரவுண்டர்களான டுவைன் பிராவோ, கிரண் போலார்ட் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

அது தொடர்பாக பேட்டியளித்த சிம்மன்ஸ், “அணி தேர்வு விவகாரத் தில் வெளியில் உள்ள ஏராள மானோரின் தலையீடு இருக்கிறது. பிராவோ, போலார்ட் ஆகியோரை சேர்க்க வேண்டும் என நானும், தேர் வுக்குழு தலைவர் கிளைவ் லாயிட் டும் தெரிவித்தோம். ஆனால் அது தொடர்பான வாக்கெடுப்பில் 3-2 என்ற கணக்கில் நாங்கள் தோற்கடிக் கப்பட்டோம். சரியான ஒருநாள் போட்டி அணி எனக்கு கொடுக்கப் படவில்லை. இது ஏமாற்றமளிப்ப தாக உள்ளது” என கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ள மேற்கிந் தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், “சிம்மன்ஸின் கருத்து, அணியின் தேர்வு முறை குறித்து கேள்வி யெழுப்புவது போன்று இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளது.

சிம்மன்ஸ் சஸ்பெண்ட் செய்யப் பட்டதைத் தொடர்ந்து, தேர்வுக்குழு உறுப்பினர் எல்டின் பாப்டிஸ்டே இடைக்கால பயிற்சியாளராக நிய மிக்கப்பட்டுள்ளார். சிம்மன்ஸுக்கு எதிராக விசாரணை தொடங்கி யுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in