Published : 07 Aug 2020 10:44 am

Updated : 07 Aug 2020 10:44 am

 

Published : 07 Aug 2020 10:44 AM
Last Updated : 07 Aug 2020 10:44 AM

இந்தியாவுக்கு எதிரான தொடர்: இடம் மாறுகிறது பாரம்பரியம் மிக்க பாக்சிங் டே டெஸ்ட்

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இதில் கிறிஸ்துமஸ் தினமான டிச.25ம் தேதிக்கு அடுத்த தினமான 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்ட் நடைபெறுவது பாரம்பரியமானது.


இந்நிலையில் மெல்போர்ன் நகரில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது, 13000 பேர் பாதிக்கப்பட்டு 170 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் பாரம்பரியமிக்க மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை மாற்றி அடிலெய்டில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அடிலெய்டில் கரோனா பாதிப்பு குறைவாக இருப்பதால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலிய கோடைகால கிரிக்கெட்டில் மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்ட் நடக்காமல் இருந்தால் அது முதல் முறையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிரிஸ்பன் மைதானத்தில் டிசம்பர் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை முதல் டெஸ்ட் நடைபெறுகிறது.

தவறவிடாதீர்!


CricketMelbourne testIndia -australia 2020-21 test seriesBoxing Day testஇந்தியா-ஆஸ்திரேலியாபாக்சிங் டே டெஸ்ட்மெல்போர்ன்அடிலெய்ட்கிரிக்கெட்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author