

குத்துச் சண்டைப் போட்டிகளில் கடந்த 20 ஆண்டுகளாக வீழ்த்த முடியாதவராக ஆதிக்கம் செலுத் திய அமெரிக்காவின் பிளாய்ட் மே வெதர் ஜுனியர், உலக வெல்டர் வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றவுடன் ஓய்வை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆன்ட்ரே பெர்டோவை வீழ்த்தியLன் மூலம் உலக வெல்டர் வெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற அவர், தனது 49-வது வெற்றியைப் பதிவு செய்து, சாதனை படைத்தார்.
உலக வெல்டர் வெயிட் போட்டி யில் ஆன்ட்ரோ பெர்டோவை எதிர்த்துக் களமிறங்கினார் மேவெதர் ஜூனியர். இதில், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் மே வெதர். அவரின் அசுர வேகத்துக்கு பெர்டோவால் ஈடுகொடுக்க முடியவில்லை. கடந்த 19 ஆண்டுகளாக வெற்றி யை மட்டுமே ருசித்துள்ள மே வெதர் இப்போட்டியிலும் வெற்றி பெற்றார். போட்டியின் மூன்று நடுவர்களுமே மே வெதர் வென்றதாக அறிவித்தனர்.
மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 3, 10-வது சுற்றுகளில் மட்டும் பெர்டோ சிறிது முன்னிலை வகித்தார். ஆனால், பெர்டோவுக்கு வேறு வாய்ப்புகளை மேவெதர் அளிக்க வில்லை. இறுதியில் 118 110, 117 111 மற்றும் 120 108 என்ற புள்ளிகள் கணக்கில் மே வெதர் வென்றார்.
உலக வெல்டர் வெயிட் போட்டி களில் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்ற மே வெதருக்கு 3.2 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.212 கோடி) ரொக்கப்பரிசு வழங்கப் பட்டது.
இவ்வெற்றி மூலம் இதுவரை வெல்டர் வெயிட் பிரிவில் பங்கேற்ற 49 போட்டிகளிலும் வென்ற ராக்கி மார்சியானோவின் சாதனையை சமன் செய்தார். இருவருமே ஒன்றில் கூட தோல்வியுறாமல் 49 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.
இதுவரை எந்த குத்துச் சண்டை வீரரும் சம்பாதிக்காத பணத்தை மே வெதர் குத்துச் சண்டை மூலம் சம்பாதித்துள்ளார்.
இப்போட்டியுடன் 38 வயதான மேவெதர் ஓய்வு பெற்றார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த விளையாட்டுத் துறை எனக்கு மிகச்சிறப்பாகவே அமைந்தது. குத்துச்சண்டையில் அனைத்து சாதனைகளையும் படைத்துவிட்டேன். ரசிகர்கள் இல்லாமல் நான் எதையும் செய்திருக்க முடியாது, நான் 40 வயதை நெருங்கிக் கொண் டிருக்கிறேன். என்னிடம் ஏராள மான பணம் இருக்கிறது. குத்துச் சண்டையில். இதற்கு மேல் என்னை நிரூபிக்க எதுவும் இல்லை. பணத்தை விட உடல் நலம் முக்கியம். எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன். இதனால் ஓய்வு பெறுகிறேன்,'' எனத் தெரிவித்துள்ளார்.