Published : 02 Aug 2020 03:37 PM
Last Updated : 02 Aug 2020 03:37 PM

மஞ்சுரேக்கருக்கு மன்னிப்பில்லையா?- ஐபிஎல் வர்ணனைக்கு இதுவரை அழைப்பில்லை

சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் கருத்துக்களுக்கு மன்னிப்புக் கேட்க தயார் என்று பிசிசிஐக்கும் கங்குலிக்கும் மெயில் அனுப்பியும் ஐபிஎல் 2020 வர்ணனைக்கு அவருக்கு அழைப்பு இதுவரை இல்லை, மற்ற ரெகுலர் வர்ணனையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக மும்பை மிரர் செய்தி கூறுவதென்னவெனில்,

பிசிசிஐ-யிடமிருந்து சுனில் கவாஸ்கர், எல்.சிவராம கிருஷ்ணன், முரளி கார்த்திக், ஹர்ஷா போக்ளே ஆகியோருக்கு மெயில் சென்றுள்ளது. ஆனால் சஞ்சய் மஞ்சுரேக்கருக்கு அழைப்பில்லை.

மற்ற வெளிநாட்டு வர்ணனையாளர்களுக்கும் அழைப்புச் செய்தி போயிருப்பதாகத் தெரிகிறது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மார்ச் மாதம் ஆடிய தொடர், அதாவது கரோனாவினால் கைவிடப்பட்ட தொடருக்குக் கூட மஞ்சுரேக்கர் வர்ணனைக் குழுவில் இடம்பெறவில்லை.

அதன் பிறகுதான் அவர் சமீபத்தில் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி தன்னால் யார் மனம் புண்பட்டிருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயார் என்று கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த கிரிக்கெட் நிர்வாகக் குழுவில் இருக்கும் ராமச்சந்திர குஹா, இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சூப்பர்ஸ்டார் கலாச்சாரம் ஊடுருவியுள்ளதாகவும் கேப்டனுக்கு அதிகாரம் அதிகமாக அளிக்கப்பட்டு அவரே வர்ணனையாளரையும் தேர்வு செய்வதில் செல்வாக்கு செலுத்துவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் வர்ணனையில் இந்திய வீரர்களின் ஆட்டத்தை அதற்குரிய மரியாதையுடன் விமர்சனம் செய்து வந்தார். ஆனால் இன்றைய தலைமுறை வீரர்களுக்கோ விமர்சனம் என்றால் எட்டிக்காய். அதனால் மஞ்சுரேக்கர் நெட்டித்தள்ளிப் பட்டுள்ளார்.

இப்போது கங்குலி நினைத்தால்தான் மஞ்சுரேக்கர் வர்ணனைக்கு வர முடியும். ஸ்டார் வீரர்கள், அவர்களது வணிக முக்கியத்துவம், ஸ்பான்ஸர் நலம் என்று கிரிக்கெட்டை வணிகம் பிடித்து ஆட்டுகிறது. ரெய்னாவும் இதை அன்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x