3 நாள் டெஸ்ட் போட்டி: இந்தியா 411 ரன்களில் டிக்ளேர்

3 நாள் டெஸ்ட் போட்டி: இந்தியா 411 ரன்களில் டிக்ளேர்
Updated on
1 min read

வங்கதேச ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி 86.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 52.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு சுருண்டது. இந்தியத் தரப்பில் வருண் ஆரோன், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகர் தவன் 116, ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன் 3 சிக்ஸர், 18 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து 4-வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-சங்கர் ஜோடி 108 ரன்கள் சேர்த்தது. கருண் நாயர் 71 ரன்களும், சங்கர் 110 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டிக்ளேர் செய்வதாக அறிவித்தது இந்தியா. அப்போது இந்திய அணி 86.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்திருந்தது. நமன் ஓஜா 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து முதல் இன்னிங் ஸில் 123 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி 11 ஓவர் களில் 2 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட வங்கதேசம் இன்னும் 147 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in