Published : 29 Jul 2020 04:35 PM
Last Updated : 29 Jul 2020 04:35 PM

சதங்களை இரட்டைச் சதமாகவும் முச்சதமாகவும் மாற்ற சச்சினுக்குத் தெரியவில்லை: கபில் தேவ் வெளிப்படை

மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர் என்றெல்லாம் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு சதத்தை இரட்டைச் சதமாகவும் முச்சதமாகவும் மாற்றத் தெரியவில்லை என்று லெஜண்ட் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 6 இரட்டைச் சதங்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார், ஒரு இரட்டைச் சதம் ஒரு நாள் போட்டிகளில் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 248 ரன்களை எடுத்துள்ளார் 250-ஐ தொட்டதில்லை.

டபிள்யு. வி.ராமன் உடன் உரையாடுகையில் கபில் தேவ் கூறியதாவது:

சச்சினிடம் வேறொரு வீரரிடம் நான் காணாத அசாத்திய திறமைகள் இருக்கின்றன. சதங்கள் எப்படி எடுப்பது என்பதை சச்சின் நன்றாக அறிந்திருக்கிறார், ஆனால் அவர் கருணையற்ற பேட்ஸ்மெனாக மாறவில்லை.

கிரிக்கெட்டில் அவர் அனைத்தையும் பெற்றார். சதம் எப்படி எடுப்பது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது, ஆனால் அதை இரட்டைச் சதமாகவோ முச்சதமாகவோ அவரால் மாற்ற முடியவில்லை.

வேகப்பந்து வீச்சாளர், ஸ்பின்னர் என்று யாராக இருந்தாலும் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடிக்க முடியக்கூடிய சச்சின் டெண்டுல்கர் குறைந்தது 3 முச்சதங்கள் 10 இரட்டைச் சதங்களை அடித்திருக்க வேண்டும்., என்றார் கபில்தேவ்.

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களை எடுத்துள்ளார். 15,000 ரன்களைக் கடந்த ஒரே வீரர், ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட அவர் பெயரில் ஒரு முச்சதம் இல்லை.

இலங்கையின் குமார் சங்கக்காரா 11 இரட்டைச் சதம் எடுத்துள்ளார், பிரையன் லாரா 9 முறை இரட்டைச் சதம் எடுத்துள்ளார், ஒரு 375, ஒரு 400 ரன்களும், இங்கிலாந்து கவுண்டியில் ஒருமுறை 500 ரன்களையும் பிரையன் லாரா எடுத்துள்ளார்.

சேவாக் 6 இரட்டைச் சதங்களையும் 2 முச்சதங்களையும் எடுத்துள்ளார், இலங்கைக்கு எதிராக 3வது முச்சதம் எடுத்திருப்பார் ஆனால் 294 ரன்களில் ஆட்டமிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x