

இந்திய அணியின் அடுத்த எம்.எஸ். தோனி யார் என்றால் அது ரோஹித் சர்மாதான் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஓவர் நிகழ்ச்சிக்காக சுரேஷ் ரெய்னா கூறும்போது, “ரோஹித் சர்மா இந்திய அணியின் அடுத்த தோனி என்று நான் நினைக்கிறேன்.
தோனி போலவே அமைதியாக இருக்கிறார், அடுத்தவர் பேச்சை கூர்ந்து கவனிக்கிறார். வீரர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார். அதோடு மட்டுமல்லாமல் முன்னின்று வழிநடத்துகிறார்.
ஒரு கேப்டன் முன்னின்று வழிநடத்துகிறார் மேலும் ஓய்வறை சூழ்நிலையும் கெடாமல் பாதுகாக்கிறார் என்றால் அவர் அனைத்துக்கும் தகுதியானவர்தான்.
அணியில் அனைவருமே கேப்டன் என நினைக்கிறார் ரோஹித் சர்ம, நான் அவர் கேப்டன்சியில் பங்களாதேஷில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடியிருக்கிறேன். ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், சாஹல் போன்ற இளம் வீரர்களுக்கு அவர் எப்படி தன்னம்பிக்கை ஊட்டுகிறார் என்று நான் கவனித்தேன்
ரோஹித் சர்மாவை முன் வைத்து வீரர்கள் தீவிரத்தன்மையை மகிழ்ச்சியுடன் ஏற்று விளையாடுகின்றனர். ரோஹித் சர்மா பின்னால் உள்ள ஒளிவட்டத்தை அனைவருமே மகிழ்ச்சியுடன் அணுகுகின்றனர். இன்னொருவர் நம் மீதுள்ள ஒளிவட்டத்தை ரசிக்கிறார்கள் என்றாலே நாம் தன்னம்பிக்கையுடன் அதிரடி ஆட்டத்தை ஆடுவோம். இதில் ரோஹித் சர்மா சிறப்பாகச் செயல்படுகிறார்.
தோனி பிரில்லியண்ட், ஆனால் ரோஹித் அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இருவரும் ஒரே மாதிரியான நடத்தை கொண்டவர்கள். இருவருமே அமைதியானவர்கள், அடுத்தவர்கள் பேச்சைக் கவனிக்கக் கூடியவர்கள், அடுத்தவர் ஆலோசனையைக் கேட்கும் கேப்டன் என்றாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
இதன் மூலம் வீரர்களின் மனப்பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம், என் புத்தகத்தில் இருவருமே அருமைதான்.” என்று கூறினார் ரோஹித் சர்மா.