Last Updated : 21 Sep, 2015 09:25 AM

 

Published : 21 Sep 2015 09:25 AM
Last Updated : 21 Sep 2015 09:25 AM

கொரிய ஓபன் பேட்மிண்டன்: வெள்ளி வென்றார் அஜய் ஜெயராம்

கொரிய ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் தோல்வியுற்று, வெள்ளிப்பதக்கம் வென்றார். உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் சென் லாங்கிடம் அவர் தோல்வியுற்றார்.

சியோலில் நடைபெற்ற இத்தொடர் முழுவதும் உயர்தர ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் அஜய் ஜெயராம்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அஜய் ஜெயராமும், சீனாவின் சென் லாங்கும் மோதினர். இப்போட்டியில் சென் லாங் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 21-14, 21-13 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் அஜய் ஜெயராம் 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால், அதனைத் தனக்குச் சாதகமாக முடிக்க அவர் தவறினார்.

இதையடுத்து 2-வது இடம் பெற்ற அஜய் ஜெயராம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பெங்களூரைச் சேர்ந்த அஜய் ஜெயராம் இந்த சீசனில், மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரீ, ஸ்விஸ் ஓபன் கிராண்ட் பிரீ, ரஷ்ய ஓபன் கிராண்ட் பிரீ தொடர்களில் அரையிறுதிவரை முன்னேறியது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x