

தென் கொரிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடை பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அஜய் ஜெயராம் 17-21, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் வாங் விங் கீ வின்சென்டை தோற் கடித்தார். ஜெயராம் தனது காலிறுதி யில் இந்தோனேசியாவைச் சேர்ந்த தகுதிநிலை வீரரான கிறிஸ்டி ஜொனாதனை சந்திக்கிறார். மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி.சிந்து 16-21, 13-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் சயாக்கா டக்காஷியிடம் தோல்வி கண்டார்.