ஷேன் வார்ன் வேற ஒரு லெவல், என்னை அவருடன் ஒப்பிடுவதுதான் புரியவில்லை: அனில் கும்ப்ளே வெளிப்படை

ஷேன் வார்ன் வேற ஒரு லெவல், என்னை அவருடன் ஒப்பிடுவதுதான் புரியவில்லை: அனில் கும்ப்ளே வெளிப்படை
Updated on
1 min read

டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த நம்பர் 1 இந்திய பவுலர் என்ற பெருமைக்குரிய அனில் கும்ப்ளே தன்னை ஆஸ்திரேலிய லெஜண்ட் ஷேன் வார்னுடன் ஒப்பிடுவது மட்டும் தனக்கு புரியாத புதிர் என்று தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ் செஷனில் அவர் மபாங்வாவுடன் பேசிய போது கூறியதாவது:

அதிக விக்கெட்டுகளுடன் முடித்தது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. நான் ஒரு போதும் புள்ளிவிவரங்கள், சராசரிகள் பற்றி கவலைப்பட்டதில்லை, நாள் முழுக்க பவுலிங் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் அறியேன்.

முரளி, வார்னுடன் அதிக விக்கெட்டுகளுக்கான 3வது பவுலராக சாதித்திருப்பது பெருமையளிக்கிறது, நாங்கள் மூவருமே சமகாலத்தவர்கள் ஆகவே நிறைய ஒப்பீடுகள் இருப்பது இயல்புதான்.

ஆனால் என்னை ஷேன் வார்னுடன் ஏன் ஒப்பிட்டார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர்தான். வார்ன் உண்மையில் வித்தியாசமான பவுலர். அவர் வேறு ஒரு லெவலில் இருக்கிறார்.

முரளியும் வார்னும் எந்த பிட்சிலும் பந்தை பயங்கரமாக திருப்புவார்கள், ஆனால் எனக்கு அது வராது. அவர்கள் இருவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், என்றார் கும்ப்ளே.

ஆனால் ஒருமுறை மெல்போர்னில் முதல் நாள் வறண்ட பிட்சில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது, ஷேன் வார்ன் ‘மெல்போர்னில் முதல்நாள் பிட்சில் 5 விக்கெட்டுகள் என்றால் என்னால் கூட சாதிக்க முடியாதை கும்ப்ளே சாதித்திருக்கிறார்’ என்று கூறியதை நாம் இங்கு நினைவுகூர முடியும்.

வரும் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே செயல்படுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in