ஒவ்வொரு பந்துக்கும் 4 வகையான ஷாட்களை வைத்திருப்பார், வீசுவது கடினம்: அனில் கும்ப்ளே பாராட்டைப் பெற்ற வீரர் யார்?

ஒவ்வொரு பந்துக்கும் 4 வகையான ஷாட்களை வைத்திருப்பார், வீசுவது கடினம்: அனில் கும்ப்ளே பாராட்டைப் பெற்ற வீரர் யார்?
Updated on
1 min read

இந்தியாவின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய லெஜண்ட் அனில் கும்ப்ளே தான் வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார் என்பதை முதன் முதலில் தெரிவித்துள்ளார்.

அனில் கும்ப்ளேயை ரிக்கி பாண்டிங், இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ்,பிரையன் லாரா என்று மிகச்சிறந்த வீரர்கள் விளையாடியுள்ளனர்.

132 டெஸ்ட் போட்டிகள் 271 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்திய நம்பர் 1 டெஸ்ட் பவுலராவார், ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இதில் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருமுறை 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் தனக்கு வீசக் கடினமான பேட்ஸ்மென் யார் என்று அனில் கும்ப்ளே கூறும்போது, “இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், விரேந்திர சேவாக், கங்குலி, லஷ்மண் ஆகிய மிகப்பெரிய வீரர்கள் ஆடிய காலத்தில் நானும் ஆடியது அதிர்ஷ்டகரமானது.

இவர்கள் அனைவரும் நல்ல வேளையாக வலைப்பயிற்சியில்தான் என் பந்துகளை எதிர்கொண்டனர், மேட்சில் அல்ல. ஒவ்வொரு போட்டியின் போதும் முதல் நாள் மாலை நான் இவர்களுக்கு வீசுவேன்.

பந்து வீசக் கடினமான பல பேட்ஸ்மென்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் கடினமானவர் என்று நான் கருதுவது பிரையன் லாராவைத்தான். எனது ஒவ்வொரு பந்துக்கும் 4 வேறுபட்ட ஷாட்களை அவர் வைத்திருப்பார். இதுதான் பெரிய சவால். அவரை பீட் செய்கிறோம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் போது அவர் அழகாக பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விடுவார். அவருக்கு வீசுவது கடினம்” என்றார் அனில் கும்ப்ளே.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in