மகாயா நிடினியுடன் ஆடிய வீரர்கள் மீது இருந்த மதிப்பு போய்விட்டது: டேரன் சமி விளாசல் 

மகாயா நிடினியுடன் ஆடிய வீரர்கள் மீது இருந்த மதிப்பு போய்விட்டது: டேரன் சமி விளாசல் 
Updated on
1 min read

390 விக்கெட்டுகளை எடுத்த தென் ஆப்பிரிக்கா மண்ணின் மைந்தன் மகாயா நிடினி தான் ஆடிய காலக்கட்டத்தில் தன்னை சக வீரர்கள் ஒதுக்கியே வைத்திருந்தனர் என்றும் தனிமையே தன் கதி என்றும் வேதனையுடன் பெரிய பேட்டி ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து கருப்பரின வீரர்களுக்காக குரல் கொடுத்து வரும் மே.இ.தீவுகள் முன்னாள் கேப்டன் டேரன் சமி தெ. ஆ.வீரர்களை சாடியுள்ளார்.

மகாயா நிடினிதான் தென் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவம் செய்த முதல் கருப்பரின வீரர் ஆவார். ‘ஒரே தேசிய கீதம் பாடுவோம், ஒரே சீருடை அணிவோம் ஆனால் என்னுடன் யாரும் சேர்ந்து உணவு உண்ண மாட்டார்கள், பஸ்ஸில் நான் கடைசி சீட்டில் அமர்ந்தால் சக வீரர்கள் இடைவெளி விட்டு முன்னால் அமர்வார்கள், அருகில் அமர மாட்டார்கள்’ என்று தென் ஆப்பிரிக்க அணியின் நிறவெறியை அம்பலப்படுத்தினார் மகாயா நிடினி.

இந்நிலையில் ‘கருப்பர்கள் உயிர் முக்கியம்’ என்ற இயக்கத்துக்கு குரல் கொடுத்து வரும் டேரன் சமி, ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சிலரிடத்திலும் காணப்பட்ட நிறவெறியை அம்பலப்படுத்தினார். மகாயா நிடினியின் வேதனையைப் பகிர்ந்து கொண்ட டேரன் சமி தெரிவிக்கும் போது, “இது மிகவும் துயரமானது. மகாயா நிடினிக்கும் இது ஏன் என்று என்னைப்போலவே புரியவில்லை. தனிமையிலிருந்து அவர் ஓடியே போயிருக்கிறார். அவரது சக வீரர்கள் மேல் இருந்த மதிப்பு போய்விட்டது. அந்த வீரர்களை நினைத்து வெட்கப்படுகிறேன். நிடினி நீங்கள் எங்களுக்கு எப்பவுமே ஹீரோதான்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in