

இந்தியா-வங்கதேச ஏ அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டி பெங்களூரில் இன்று நடைபெறுகிறது.
முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்தி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் அதேபோன்று சிறப்பாக ஆடி தொடரை வெல்வதில் தீவிரமாக உள்ளது.
கடந்த போட்டியைப் பொறுத்த வரையில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான மணீஷ் பாண்டே, உன்முக்த் சந்த், சுரேஷ் ரெய்னா போன்றோர் சொதப்பிய போதும், பின்வரிசையில் சஞ்சு சாம்சன், குருகீரத் சிங், ரிஷி தவன் ஆகியோர் அசத்தலாக ஆடி ரன் குவித்தனர். குறிப்பாக குருகீரத் சிங் 58 பந்துகளில் 65 ரன்கள் குவித்ததோடு, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரையில் மயங்க் அகர்வால்-கேப்டன் உன்முக்த் சந்த் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்க தொடருக்கு ஆயத்தமாவதற்காக இந்தத் தொடரில் விளையாடி வரும் ரெய்னா ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாட வுள்ள உத்தேச இந்திய அணி யில் இடம்பெற்றுள்ள மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ் ஆகியோர் தங்களின் இடத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக இந்தப் போட்டி யில் சிறப்பாக ஆட முயற்சிப் பார்கள். கடந்த போட்டியில் இந்தியா 300 ரன்களை தாண்டுவ தற்கு முக்கியக் காரணமாக இருந்த சஞ்சு சாம்சன், குருகீரத் சிங், ரிஷி தவன் ஆகியோர் இந்தப் போட்டியிலும் இந்திய அணிக்கு கை கொடுப்பார்கள் என நம்பலாம்.
வேகப்பந்து வீச்சில் தவல் குல்கர்னி, ஸ்ரீநாத் அரவிந்த், ரிஷி தவன் ஆகியோரும், சுழற் பந்து வீச்சில் குருகீரத் சிங், கரண் சர்மா, ரெய்னா ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர். இவர் களில் அரவிந்த், பெங்களூர் மைதானத்தைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அது அவருக்கு கூடுதல் பலமாகும்.
வங்கதேச அணி கடந்த போட்டியில் தோற்றிருந்தாலும், லிட்டன் தாஸ் (75 ரன்கள்), நாசிர் ஹுசைன் (52), சபீர் ரஹ்மான் (25) ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடினர். அந்த அணி தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு அந்த அணியின் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவது முக்கியமாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் ஏராளமான சர்வதேச வீரர்கள் வங்கதேச அணியில் இடம்பெற்றுள்ளனர். எனவே இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது வங்கதேசம். ஒருவேளை இந்தத் தொடரில் தோற்றால் அது ஆஸ்திரேலியத் தொடரில் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இந்தியா
உன்முக்த் சந்த் (கேப்டன்), மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், சஞ்சு சாம்சன், கருண் நாயர், குல்தீப் யாதவ், ஜெயந்த் யாதவ், கரண் சர்மா, ரிஷி தவன், நாத் அரவிந்த், தவல் குல்கர்னி, ரஷ் கேலரியா, குருகீரத் சிங்.
வங்கதேசம்
மோமினுல் ஹக் (கேப்டன்), அனாமுல் ஹக், ரோனி தலுக்தார், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), சபீர் ரஹ்மான், சவும்ய சர்க்கார், நாசிர் ஹுசைன், அராபட் சன்னி, சக்லைன் சாஜிப், சுகவதா ஹோம், ரூபெல் ஹுசைன், டஸ்கின் அஹ மது, அல் அமீன் ஹுசைன், ஷபியுல் இஸ்லாம், ஜுபைர் ஹுசைன்.
போட்டிநேரம்: காலை 9