Published : 16 Sep 2015 09:47 AM
Last Updated : 16 Sep 2015 09:47 AM

சச்சினின் டி-20-க்கு அனுமதி

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் சச்சின், வார்னே இணைந்து நடத்தவுள்ள மூத்த வீரர்கள் பங்கேற்கும் 3 டி-20 போட்டிகளுக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

சச்சின், வார்னே, டிராவிட், கிளென் மெக்ராத், ஜாக்ஸ் காலிஸ், ஆடம் கில்கிறிஸ்ட், சவுரவ் கங்குலி, பிரையன் லாரா, விவிஎஸ் லட்சுமணன், வாசிம் அக்ரம் உள்ளிட்ட 26 வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகின்றனர்.

இப்போட்டிகளால் அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமடையும் என ஐசிசி கருத்து தெரிவித்துள்ளது. இப்போட்டிக்கு அனுமதி அளித்துள்ள போதிலும், உட்கட்டமைப்புக்கான செலவினங்களை ஐசிசி ஏற்றுக்கொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x