Published : 19 Jul 2020 02:53 PM
Last Updated : 19 Jul 2020 02:53 PM

கிரிக்கெட் வீரராக கம்பீரைப் பிடித்திருக்கிறது, மனிதராக அவருக்கு சில பிரச்சினைகள் உள்ளன- ஷாகித் அப்ரீடி சீண்டல்

களம் முதல் களத்துக்கு வெளியே வரை கம்பீர்-ஷாகித் அப்ரீடி மோதல் தொடர்ந்து வருகிறது. ட்விட்டர், வீடியோ என இவர்கள் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

பிரதமர் மோடியைப் பற்றியும் காஷ்மீர் விவகாரம் பற்றியும் பரபரப்பான உணர்வு நிலை பிரதேசங்களை தன் பேச்சின் மூலம் அப்ரீடி சீண்டும் குணம் கொண்டவர், அப்படி சீண்டி கம்பீர் உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார், நெட்டிசன்களும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கம்பீரை சீண்டும் விதமாக அப்ரீடி, “ஒரு கிரிக்கெட் வீரராக,ஒரு பேட்ஸ்மெனாக எனக்கு அவரைப் பிடிக்கும். ஆனால் ஒரு மனிதராக அவர் சில வேளைகளில் சில விஷயங்களை பேசுகிறார், அவருக்கு ஏதோ பிரச்சினைகள் இருக்கின்றன. அவரது உடல்பயிற்சியாளர் (பேடி அப்டன்) ஏற்கெனவே இதை தெளிவுபடுத்தியுள்ளார்” என்று அப்பாஸுடனான உரையாடலில் தெரிவித்துள்ளார்.

பேடி அப்டன் தன் புத்தகத்தில் கம்பீரைப் பற்றி கூறும்போது, பலவீனமானவர் மனத்தளவில் பாதுகாப்பற்றவராக அவர் உணர்கிறார் என்று கூறியதைத்தான் அப்ரீடி மீண்டும் கூறுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x